திருவள்ளூர் அருகே பச்சிளம் குழந்தையை குழியில் வீசி கொலை செய்த பெண் கைது

திருவள்ளூர் அருகே பச்சிளம் குழந்தையை குழியில் வீசி கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.;

Update: 2023-08-04 10:26 GMT

திருவள்ளூர் அருகே கள்ளதொடர்பால் பிறந்த பச்சிளம் குழந்தையை 10 அடி குழியில் வீசி கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் அருகே கொசவன்பாளையம் சுடுகாட்டில் குழந்தையின் அழுகுரல் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது 10 அடி  குழிக்குள் பச்சிளம் குழந்தை இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தொப்புள் கொடியுடன் முகத்தில் சிறு சிறு ரத்த காயங்களுடன் இருந்த குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு பச்சிளம் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்துவந்த நிலையத்தில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பச்சிளம் குழந்தையை குழிக்குள் வீசி சென்றது யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த லதா என்பவர் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் இவருடைய கணவர் சங்கர் என்பவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்து போனார்.

இந்நிலையில் லதா கள்ளத்தொடர்பில் மீண்டும் கர்ப்பமடைந்திருக்கிறார். இதனால் பெற்ற சிலமணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தையை யாருக்கும் தெரியாமல் சுடுகாட்டில் உள்ள 10 அடி குழிக்குள் வீசிவிட்டு வந்தது தெரியவந்தது இதனையடுத்து அவரை கைது செய்து கள்ளக்காதலன் யார் என்பதும் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர் அருகே கள்ளதொடர்பால் பிறந்த பச்சிளம் குழந்தையை சுடுகாட்டில் 10 அடி குழியில் வீசி கொலை செய்த பெண்ணை போலீசார் கைது  செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது‌.

Tags:    

Similar News