திருவள்ளூர் தொகுதியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வேன்: காங்கிரஸ் வேட்பாளர்

தன்னை வெற்றி பெறச் செய்தால் திருவள்ளூரை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வேன் என்று காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் கூறினார்

Update: 2024-03-26 02:30 GMT

கூட்டத்தில் பேசும் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 

திருவள்ளூர் தொகுதியில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் தனக்குத் தெரியும் என்றும் வரக்கூடிய ஐந்து ஆண்டுகளில் திருவள்ளூர் தொகுதியை மிகப்பெரிய வளர்ச்சிக்கு கொண்டு செல்வேன் என்றும் திமுக கூட்டணி சார்பில் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் ஐ ஏ எஸ் கூறியுள்ளார்.

திருவள்ளூரில் நடைபெற்ற காங்கிரஸ் வேட்பாளர் அறிமுக கூட்டம்மானது மாவட்ட தலைவரும் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருமான தூரைசந்திரசேகர், தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் நாடாளுமன்ற தேர்தலில் திருவள்ளூர் தனி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் சசிகாந் செந்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கட்சி வளர்ச்சியினைகுறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்,

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் நான் சென்னையில் பிறந்தாலும் திருவள்ளூர் அருகே உள்ள பெருமாள்பட்டு கிராமத்தில் தான் வளர்ந்ததாகவும், ஆகையால் எனக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மக்கள் நன்கு அறிமுகம் உள்ளதாகவும்,நான் ஐஏஎஸ் படிப்பு முடித்த பின்னர் கர்நாடகாவில் மூன்று மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்துள்ளேன் என்றும் கூறினார்

அரசியல் சூழ்நிலை பிடிக்காமல் பணியிலிருந்து விலகி உள்ளதாகவும், இருந்தபோதிலும் எனக்கு அடுத்து வரும் தலைமுறைகள் இந்த சமுதாயத்தில் என்னைப் போல பெரிய அதிகாரிகளாக வளர வேண்டும் என்பதற்காகவே காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைந்து கொண்டு பணியாற்றி வருகிறேன். இதுவரை நாம் வாழ்ந்து வந்த வளர்ச்சியை பாஜக அரசு பின்னடைவு செய்துள்ளது. குறிப்பாக கல்வியில் முன்னேற்றத்திற்கான அனைத்து வாய்ப்புகளையும் பாஜக அரசு தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் 50 ஆண்டுகளில் கல்வி பின்னோக்கி செல்லக்கூடிய அவல நிலை ஏற்படும் என்றார்.

மேலும் தொடர்ந்து பேசியவர் தனக்கு திருவள்ளூர் மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்தால் வரக்கூடிய ஐந்து ஆண்டு காலத்தில் திருவள்ளூர் தொகுதியை மிகப்பெரிய வளர்ச்சியடைய செய்வேன். நான் ஐஏஎஸ் அதிகாரியாக பணிபுரிந்ததால் மக்களுக்கு பல்வேறு திட்டங்களுக்கான நிதியை எங்கிருந்து எப்படி பெற வேண்டும் என வழிமுறைகள் தெரியும் என்பதால்  அதன் படி வழிமுறைகளை பின்பற்றி வளர்ச்சி பணிகளை நிறைவேற்றுவேன் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின் போது மாநிலத் துணைத் தலைவர் ஏகட்டூர் ஆனந்தன்,திருவள்ளூர் நகர தலைவர் ஜோஷி, மற்றும் கோவிந்தராஜ்,அஸ்வின் குமார், தளபதி மூர்த்தி, கட்சி நிர்வாகிகள் அனைவரும் இதில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News