ஆவடி அருகே மனைவியின் கள்ளக்காதலன் வீடு புகுந்து வெட்டிக்கொலை

ஆவடி அருகே மனைவியின் கள்ளக்காதலன் வீடு புகுந்து வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2023-06-30 10:01 GMT

ஆவடி அருகே தகாத உறவு காரணமாக காதலி கண் முன்னே கள்ளக்காதலன் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்துகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம்  ஆவடி அடுத்த பொத்தூர் கிராமத்தை  சேர்ந்தவர் சுரேஷ் குமார்(29).இவர் கார் ஓட்டுனராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் சுரேஷ்குமார் வசித்து வரும் பகுதியில் விஜயலட்சுமி என்பவர் கணவனுடன் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இதனை அடுத்து விஜயலட்சுமிக்கு சுரேஷ்குமாருடன் பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாரி கணவன் மனைவி போல் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று சுரேஷ்குமார் வழக்கம் போல் வேலைக்கு தயாராகி கிளம்பிய போது வீட்டிற்குள் திடீரென மர்ம  கும்பல் ஒன்று புகுந்து அவர்கள் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களை கொண்டு சுரேஷ்குமாரை சரமாரியாக வெட்டியது. அருகில் இருந்த விஜயலட்சுமிக்கும் வெட்டு காயம் ஏற்பட்டது. பலத்த காயமடைந்த சுரேஷ்குமார் சம்பவ இடத்திலேயே மயங்கி கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் துடித்து  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விஜயலட்சுமி கூச்சலிட தொடங்கினார். அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே மர்ம நபர்கள் அவர்கள் வந்த வாகனத்தில் ஏறி தப்பிச்சென்றனர்.

அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் இறந்து போன சுரேஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த விஜயலட்சுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து போலீசார்  நடத்திய விசாரணையில் விஜயலட்சுமி கணவர் சத்யாவின் தூண்டுதல் பெயரில் இச்சம்பவம் நடைபெற்றதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. கொலைக்கு காரணமான மர்ம நபர்களையும் விஜயலட்சுமி கணவன் சத்யாவையும் பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News