தேமுதிக கட்சி துவக்க நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்

தேமுதிக கட்சி 19 ஆவது ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு கொட்டும் மழையிலும் மக்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.;

Update: 2023-09-16 01:15 GMT

திருவள்ளூரில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை மற்றும் கட்சியின் துவக்க நாள் முன்னிட்டு   பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் மேற்கு மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர், கேப்டன் விஜயகாந்த்,மற்றும் கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ஆகியோரின் ஆணைக்கிணங்க மேற்கு மாவட்ட கழக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக கழகத் தொண்டரணி செயலாளர் கணேசன் கலந்து கொண்டு  பேசினார். அப்போது தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சியானது மக்களுக்காகவே கேப்டன் விஜயகாந்த் தன்னிச்சையாக உருவாக்கப்பட்ட கட்சியாகவும் மற்ற கட்சியில் இருந்து பிரிந்து வந்து மற்றொர் கட்சி உருவாக்கவில்லை.

பொதுமக்கள் கடைசியாக ஒரு சந்தர்ப்பத்தை தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு கொடுக்க வேண்டும் என்றும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் மக்களுக்கு என்ன செய்வோம் என்று சொல்ல மாட்டோம் செய்து காட்டுவோம் என்று உரையாற்றினார்,

பின்னர் கொட்டும் மழையிலும் பொதுமக்களுக்கு புடவைகள், மூன்று சக்கர வண்டி, சலவை பெட்டி உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.

இதில் திருவள்ளூர் நகர செயலாளர் மணிகண்டன், மாவட்ட அவை தலைவர் சரவணன், மாவட்ட பொருளாளர் சேகர், மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர் கிளை கழக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News