தீபாவளி பண்டிகை முன்னிட்டு 160 குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள்
திருவள்ளூரில் எச்ஐவி, கொரோனாவில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.;
திருவள்ளூரில் ஷெல்டர் டிரஸ்ட் மூலம் 160 ஆதரவற்ற குழந்தைகளுக்கு தீபாவளி பண்டிகை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டத்தில் எச்ஐவி பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு தீபாவளி பண்டிகை முன்னிட்டு இனிப்பு பட்டாசுகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பிரிவுவரும் ஷெல்டர் ட்ரஸ்ட் மற்றும் பாசிட்டிவ் ஃப்ரெண்ட் வெல்பர் அசோசியேஷன் இணைந்து திருவள்ளூர் மாவட்டத்தில் எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் கொரோனாவால் பெற்றோர்களை இழந்த 160.குழந்தைகளுக்கு தீபாவளி பண்டிகை முன்னிட்டு அதனை கொண்டாடும் வகையில் இனிப்பு, பட்டாசுகள் வழங்கியும் மற்றும் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு புத்தகப் பை, நோட்டுப் புத்தகங்கள் எழுது பொருட்கள் வழங்கி குழந்தைகளை மகிழ்வித்து மகிழ்வித்துனர். இறுதியில் குழந்தைகளுக்கு அசைவ உணவுகள் பரிமாறப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜவஹர்லால் நேரு, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பிரிவு மருத்துவர் கௌரி சங்கர், மாவட்ட குழந்தைகள் நலத்துறை அலுவலர் நிஷாந்தினி, சிஎஸ்ஐ கௌடி சர்ச் ஆயர் சாமுவேல் சுந்தர் சிங், மற்றும் ஷெல்டர் டிரஸ்ட் நிறுவனர் சாலமன் ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.