மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நாட்டை காப்போம் கலைப்பயண நிகழ்ச்சி

திருவள்ளூரில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு பரப்புரை கலைப்பயண நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-10-04 10:07 GMT

திருவள்ளூரில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நாட்டை காப்போம் கலைப்பயண நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவள்ளூரில் மனித நேய மக்கள் கட்சி சார்பில், நாட்டை காப்போம் குடிமை சமூகங்கள் முன்னெடுக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு பரப்புரை கலைப்பயண வாகனத்தை வரவேற்று தேச ஒற்றுமை குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நாட்டைக் காப்போம் என்ற தலைப்பில் குடிமை சமூகங்கள் முன்னெடுக்கும் இந்திய அரசமைப்புச் சட்டம் பாதுகாப்பு பரப்புரை கலைப்பயணம் அக்டோபர் இரண்டாம் தேதி முதல் 16.ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் இறுதிக் கட்டமாக மதுரையில் அக்டோபர் 17ஆம் தேதி மக்கள் மாநாடு நடைபெறுகிறது.

இந்த கலைப்பயண குழு சார்பில் இந்தியாவை காக்க எழுவோம் ஒன்றிணைவோம் என்ற தலைப்பில் சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் பெற்ற சுதந்திரத்தை பேணி காக்கவும் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் இயற்றிய அரசமைப்பு சட்டத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை களையவும் இந்த கலைப் பயணம் தொடங்கப்பட்டுள்ளது

இந்திய மக்களாகிய நாம் இந்தியாவை ஒரு இறையாண்மை வாய்ந்த சம தர்ம நெறி சார்ந்த மதசார்பற்ற மக்களாட்சி குடியரசாக அமைக்கவும் அனைவரும் மீண்டும் குல தொழிலுக்கு செல்ல வேண்டும் என்ற மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை முறியடிக்கவும்  அனிதாவில் தொடங்கி பல மாணவர்களின் உயிரைக் குடிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் நாட்டில் மதரீதியான பாகுபாடு சாதி ரீதியான பாகுபாடு ஆகியவற்றை களைந்து இந்திய தேச ஒற்றுமையை வலியுறுத்தியும் இந்த கலைப்பயணம் மாநிலம் முழுவதும் செல்கிறது.

இந்த கலைப் பயண பிரச்சார வாகனத்தை திருவள்ளூர் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வரவேற்று திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே கலை பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

கலைப் பிரச்சாரக் குழு ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஒன்றியத் தலைவர் ஹசனுல்லா மற்றும், யாசின் மரைக்காயர், சாகுல்ஹமீத்,ஷரிப், உஸ்மான், உமர்பாஷா,மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அஸ்காப்அலி, நியாஸ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News