கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று வீடு திரும்பிய வீரருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு

நேபாளத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் விளையாடி வெற்றி பெற்று வீடு திரும்பிய அவருக்கு குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Update: 2024-01-08 05:15 GMT

நேபால் நாட்டில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று வீடு திரும்பிய ராஜ்குமாருக்கு கிராம மக்கள் மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்.

சர்வதேச அளவில் டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு மற்ற மாநிலங்கள் அளிக்கும் அரசு வேலை சலுகைகள் போன்று தமிழ்நாட்டிலும் அளிக்க வேண்டுமென சமீபத்தில் சர்வதேச அளவில் நேபால் நாட்டில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணியில் பங்கேற்று வெற்றி பெற்று வீடு திரும்பிய திருவள்ளூர் மாவட்டச் சேர்ந்த வீரர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச அளவில் டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டியானது நேபால் நாட்டில் அண்மையில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஸ்ரீலங்கா நேபால் பூட்டான் பங்களாதேஷ் சிங்கப்பூர் இந்தியா ஆகிய 6 அணிகள் பங்கேற்றன. இறுதி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது இதுவரை சர்வதேச அளவில் நடைபெற்ற போட்டியில் டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து 6 முறை வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்த போட்டியில் இந்திய அணியில் தமிழ்நாட்டில் திருவள்ளுர் மாவட்டத்திலிருந்து ராஜ்குமார் என்பவரும் கரூர் மாவட்டத்திலிருந்து ராஜேந்திரன் இருவர் பங்கேற்று இருந்தனர்.

நேபால் நாட்டில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று வீடு திரும்பிய திருவள்ளூர் மாவட்டம் புல்லரம்பாக்கம், எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமாருக்கு கிராம மக்கள் மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்.

பின்னர் செய்தியாளருடன் பேசிய அவர், டென்னிஸ் பால் கிரிக்கெட் பெடரெசன் ஆப் இந்தியா ஒன்றிய அரசு அங்கீகரித்து இருப்பதால் ஒன்றிய அரசின் துறைகள் பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படுவதும்.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் டென்னிஸ் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு அரசே முழு செலவையும் ஏற்பதும் மட்டுமின்றி அவர்களுக்கு அரசு வேலை வழங்கி வருவதும் இருந்து வருவதாகவும், மற்ற மாநிலங்கள் போல் தமிழ்நாட்டிலும் டென்னிஸ் பால் கிரிக்கெட் பெடரெசன் ஆப் இந்தியா தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அங்கீகாரம் செய்து விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச உலக அளவில் நடைபெறும் போட்டிக்கு செல்லும் செலவுகளை ஏற்று தமிழ்நாட்டிலும் அரசு வேலைகள் வழங்க வேண்டுமென நேபால் நாட்டில் சர்வதேச விளையாட்டு பங்கேற்று வீடு திரும்பிய திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர ராஜ்குமார் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News