திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகே கோவில்பத்து பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கு பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிசை அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலையை கண்டித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தினர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களுக்கு பணியின் போது பாதுகாப்பு ஏற்படுத்த தனி பாதுகாப்பு சட்டம் இயற்றிட வேண்டும், பொதுப்பணித்துறை, கனிம வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை அந்தந்த துறையினரே பாதுகாத்து கொண்டு கிராம நிர்வாக அலுவலகர்கள் பணிச்சுமையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர்.
முன்னதாக அந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தினர் கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிராசிஸ்க்கு சிறிது நேரம் மவுண அஞ்சலி செலுத்தினர். கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலரின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகையாக ஒரு கோடி வழங்கப்படும் என தமிழக அரசு உடனடியாக அறிவித்தற்கும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததற்கும் நன்றி தெரிவித்தனர்.