மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் 11 ம்நாள் காரியம் : ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கிய ரசிகர்கள்

Vijaykanth 11 th day Ceremony Annadanam கன்னிகைப்பேர் கிராமத்தில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் 11.நாள் காரியத்தையொட்டி அவரது ரசிகர்கள் மொட்டை அடித்து ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினார்.;

Update: 2024-01-09 03:00 GMT

பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் விஜய்காந்தின் 11-ம் நாள் காரியத்தையொட்டி அவரது ரசிகர்கள் மொட்டை அடித்து கொண்டனர். .

Vijaykanth 11 th day Ceremony Annadanam 

பிரபல நடிகரும்,சட்டமன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்தவரும், மக்களாலும்,ரசிகர்களாலும் கேப்டன் என்று அன்பாக அழைக்கப்பட்டவருமான நடிகர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28-ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இந்நிலையில்,அவரது உடலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் வந்து அஞ்சலி செலுத்தினர்.

Vijaykanth 11 th day Ceremony Annadanam 


பின்னர்,அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க அவரது உடல் அடக்கம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேசிய முற்போக்கு திராவிடக் கழக தலைமை கழக அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.தமிழகம் மட்டும் இல்லாது ஆந்திரா, தெலுங்கானா,கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும்,பல்வேறு நாடுகளிலும் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

Vijaykanth 11 th day Ceremony Annadanam 



நேற்று முன்தினம் அவருக்கு அவரது குடும்பத்தினர் 11-ம் நாள் காரியம் எனப்படும் நிகழ்ச்சியை செய்தனர். இந்நிலையில்,திருவள்ளூர் மாவட்டம்,எல்லாபுரம் ஒன்றியம்,கன்னிகைப்பேர் ஊராட்சியில் அவரது ரசிகர்கள் விஜயகாந்தின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர்,அவருக்கு 11-ம் நாள் காரியம் செய்யும் வகையில் மூன்று ரசிகர்கள் மொட்டை அடித்துக் கொண்டனர்.11 ரசிகர்கள் மீசையை எடுத்துக் கொண்டனர்.இதன் பின்னர்,மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரையில் அங்கு வந்த ஆயிரக்கணக்கான பொது மக்களுக்கு அவரது பாணியில் டேபிள்-சேரில் அமர வைத்து அசைவ உணவு பரிமாறி அன்னதானம் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், நீதிசெல்வகுமார், சார்லஸ்ரவி,ராஜ்குமார்,குமார்,காயத்ரிஉதயகுமார், வெங்கடாசலம்,வைரம், நாகராஜ்,கருணா, வெங்கடேசன்,பாஸ்கர், முருகன்,ராமன்,செல்வம், சரேஷ்,திருக்கண்டலம் பூபாலன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News