வீடு தீ பற்றி எரிந்ததால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
புட்லூர் கிராமத்தில் மின் கசிவால் வீடு எரிந்த விவகாரத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மூன்று வீடுகளை இழந்த குடும்பங்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட புட்லூர் ஊராட்சியில் உள்ள ஸ்ரீராம் நகர் பகுதியில் 16 ஆண்டுகளாக குடும்பத்துடன் குடிசை வீடுகள் அமைத்து வசித்து வருகின்ற மூன்று குடும்பமும்இந்து மராட்டிய வகுப்பு சார்ந்தவர்கள். இவர்கள் தினமும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த வாரம் 4 ஆம் தேதி அன்று பிற்பகல் 1:30 மணி அளவில் பக்கத்து வீட்டில் வசிக்கும் ராஜா என்பவரின் வீடு பூட்டிய நிலையில் அவருடைய வீட்டிற்கு மேலே செல்லும் மின் ஒயர்கள் உரசியதில் மின் கசிவு ஏற்பட்டு ராஜா என்பவரின் ஓலை வீடு மற்றும் பக்கத்தில் உள்ள சந்திரசேகர் என்பவரின் ஓலை வீடும் முழுவதுமாக எரிந்து விட்டது
வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் குடியுரிமை சம்பந்தமான ஆதார் அட்டை,வாக்காளர் அட்டை, கியாஸ் சிலிண்டர் அட்டை, மின்சார கட்டண அட்டை, மாணவர்களின் படிப்பு சான்றிதழ் டிசி ஆகியவை முழுவதுமாக எரிந்து சாம்பல் ஆனது .அது மட்டும் இல்லாமல் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்ட இருந்த இருசக்கர வாகனம் மற்றும் 2 லட்சம் ரூபாய் ரொக்க பணம் முழுவதுமாக எரிந்து சாம்பல் ஆனது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் நுரை கலந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
வீடு இழந்த மக்கள் தெரிவிக்கையில் மேற்கொண்ட இடத்தில் சுமார் 16 ஆண்டு காலமாக குடிசைகள் அமைத்து வாழ்ந்து வந்ததாகவும் நாங்கள் மிகவும் மன உளைச்சல் அடைந்துள்ளோம் உடனடியாக எங்களுக்கு ஏற்பட்ட இந்த இழப்பை ஈடு கட்டும் வகையில் தமிழக அரசு உடனடியாக மூன்று குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் தொடர்ந்து மூன்று வீடுகள் கட்ட ஏதுவாக நிவாரணம் பணம் வழங்க வேண்டும் என்றும்
இதுவரை கடந்த நான்கு நாட்களாக புட்லூர் ஊராட்சி மன்ற தலைவர் லோகம்மாள் கண்ணதாசன் அவர்கள் எங்களுக்கு உதவி செய்து வந்துள்ளார். மேலும் எங்கள் ஊராட்சி மன்ற தலைவர் மூலமாக நாங்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்துள்ளோம்.
இந்த மனுவை விசாரித்து உடனடியாக எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும். எங்களுடைய வாழ்வாதாரம் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும். மூன்று வீடுகள் முழுவதுமாக எரிந்து விட்டதால் திக்கற்றவர்களாய் அனாதைகளாய் நாங்கள் இருக்கின்றோம் எனவே தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று மூன்று வீடுகள் எரிந்த குடும்பங்களை சார்ந்த நபர்கள் மற்றும் புட்லூர் ஊராட்சி மன்ற தலைவர் லோகம்மாள் கண்ணதாசன் வார்டு உறுப்பினர்கள் நேற்று நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.