திருவள்ளூரில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்; மாவட்ட ஆட்சியர் உத்தரவு

திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் விடும் பணி தொடங்கியது.;

Update: 2021-08-31 14:03 GMT

பைல் படம்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் சட்டவிரோதமாக மது கடத்திவரப்பட்ட வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து அந்தந்த காவல்நிலையங்கள் வைக்கப்பட்டிருந்தது. அந்த வாகனங்களுக்கு யாரும் உரிமை கோராமல் நீண்ட ஆண்டுகளாக காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்ததால், அந்த வாகனங்களை ஏலம் விட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் இன்று ஏலம் விடும் பணியானது திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே உள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்தில் தொடங்கியது. 

அதில் 204 இரு சக்கர வாகனங்கள், 18 மூன்று இருசக்கர வாகனங்கள், 42 நான்கு சக்கர ஏலம் விடும் பணியானது இன்று தொடங்கியது. இன்று நடந்த ஏலத்தில் காலை முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மேலும் ஏலம் எடுக்க விரும்புபவர்கள் வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி வரை கலந்துகொண்டு கேட்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் ஏலம் எடுக்க விரும்புபவர்கள் வைப்புத் தொகை கட்டணமாக 1000 ரூபாய் செலுத்தி, ஏலம் கேட்ட தொகை அரசு விற்பனை வரியாக இருசக்கர வாகனத்திற்கு 12 சதவீதமும் மூன்று சக்கர வாகனத்தை 18 சதவீதமும் வரி செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News