திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் குளத்தில் மிதக்கும் மீன்கள்
திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள் பற்றி விசாரணை நடந்து வருகிறது.
திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் குளத்தில் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விடப்பட்ட 3 ஆயிரம் மீன் குட்டிகள் தற்போது வளர்ந்து ஒவ்வொன்றும் சுமார் 3முதல் 5 கிலோ எடை வரை உள்ளது.கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவில் குளத்தில் பக்தர்கள் நீராடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு கோவில் குளம் கேட் மூடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விடப்பட்ட 3 ஆயிரம் மீன் குட்டிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீன்கள் தண்ணீரில் செத்து மிதக்கின்றன. இதுகுறித்து மீன்கள் இறப்பிற்கு காரணம் தெரியாமல் கோவில் நிர்வாகத்தினர் குழம்பி உள்ளனர். மேலும் செத்து மிதக்கும் மீன்களை கோனிப்பைகளில் போட்டு அப்புறப்படுத்தும் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும் நீரின் தன்மை மீன்கள் செத்து மிதக்கும் காரணம் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் ஆய்வுக்குப்பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.