நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு திருவள்ளூர் நகராட்சி தயார்!
திருவள்ளூர் நகராட்சியில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு படிவங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி மாநகராட்சி -1, திருவள்ளூர், திருத்தணி, திருவேற்காடு, பூந்தமல்லி, திருவெற்றியூர், பொன்னேரி ஆகிய 6 நகராட்சிகள்; அத்துடன் ஊத்துக்கோட்டை, ஆரணி, கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், நாரவாரிக்குப்பம, திருமழிசை, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை ஆகிய 8 பேரூராட்சிகள் உள்ளன. இவை, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராக உள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்த 745 வாக்குச்சாவடி மையத்தில் 3 லட்சத்து 28 ஆயிரத்து 342 ஆண்களும், 3 லட்சத்து 37 ஆயிரத்து 85 பெண்களும் மூன்றாம் பாலினத்தவர் 128 பேர் மொத்தம் 6 லட்சத்து 65 ஆயிரத்து 555 பேர் வாக்களிக்க உள்ளனர்.
தேர்தலுக்கான வேட்புமனு படிவங்கள் திருவள்ளூர் நகராட்சியில் வழங்கப்பட்டு வருகின்றன இப்படிவங்களை திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட உள்ள 27 வார்டுகளில் உள்ளவர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக படிவங்களை வாங்கிச் செல்கின்றனர். மாவட்டம் முழுவதும் உள்ள 8 பேரூராட்சி.6 நகராட்சி. 1 மாநகராட்சியில் வேட்பு மனு படிவங்கள் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசங்கள் அணிந்து வேட்புமனுக்களை பெற்றுச் செல்கின்றனர். பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.