தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் திருவள்ளூரில் எழுச்சி பேரணி

தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் திருவள்ளூரில் எழுச்சி பேரணி நடைபெற்றது.;

Update: 2023-07-12 08:50 GMT

திருவள்ளூரில் சத்துணவு ஊழியர்கள் பேரணி நடத்தினர்.

திருவள்ளூரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் உதிரம் சிந்தி உரிமையை பெற்றுக்கொள்கிற ரத்த கையெழுத்து இயக்கம் தமிழக முழுவதும் நடத்தபோவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


திருவள்ளூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் திருவள்ளூரில் எழுச்சி பேரணி மாவட்ட தலைவர் சிவா தலைமையில் நடைபெற்றது. இதில் முதல்வரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு நடைமுறைப்படுத்திட வேண்டும், காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிரப்ப வேண்டும், தேர்தல்கால வாக்குறுதியான காலமுறை ஊதியம் வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வழங்குவதற்கு இணையாக மாதாந்திர ஓய்வூதியம் ரூ.6750 ரூபாய்யை அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும், 10 வருடம் பணி முடித்த சத்துணவு ஊழியர்களுக்கு கல்வித்தகுதி அடிப்படையில் அரசின் அனைத்துதுறை காலிபணியிடங்களில் 50 சதவீதம் முன்னுரிமை அளித்து பணியில் சேர்த்திட வேண்டும், ஓய்வு பெறும் வயதை 60 திலிருந்து 62 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி அருகே துவங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்றனர்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட செயலாளர் சிவா தமிழ்நாடு சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு செயல்படுத்தாவிட்டால் வருகிற ஆகஸ்ட் 17 ஆம் தேதி உதிரம் சிந்தி உரிமையை பெற்றுக்கொள்கிற ரத்த கையெழுத்து இயக்கம் தமிழக முழுவதும் நடத்தபோவதாகவும், இந்த கையெழுத்தை பெற்றுக்கொண்டு ஆகஸ்ட் 30-ந் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர் வழியாக தமிழ்நாடு முதல்வருக்கு அனுப்பபோவதாகவும், இதற்கும் அரசு செவிசாய்க்காவிட்டால் வருகிற செப்டம்பர் மாதம் 28-ந் தேதி மாநில அளவிலான தமிழக முழுவதும் உள்ள அனைத்து சத்துணவு ஊழியர்கள் ஒன்றிணைந்து சென்னையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த பேரணியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் சத்துணவு ஊழியர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News