இருசக்கர வாகனம் மீது பால் வேன் மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் இருசக்கர வாகனம் மீது பால் வேன் மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.;
திருவள்ளூர் மாவட்டம் தொழுவூர் சுடுகாடு அருகே திருநின்றவூர் பகுதியிலிருந்து திருவள்ளூர் நோக்கி வந்து கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது திருவள்ளூரில் இருந்து திருநின்றவூர் பகுதிக்கு சென்றுகொண்டிருந்த பால் வேன் மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்த கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன்(28) மற்றும் சதீஷ்(26) ஆகியோர் தூக்கி வீசப்பட்டு ஐயப்பன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆபத்தான நிலையில் இருந்த சதீஷ் அருகில் இருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமணைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இருவரது உடல்களையும் திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு உடல் கூராய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து செவ்வாப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதித்து பால் வேன் ஓட்டுனர் தினேசை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இருசக்கர வாகனத்தின் மீது பால் வேன் மோதிய சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.