தமிழக வெற்றி கழகம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு காலை உணவு வழங்கல்
TVK Party Issued Morining Tiffin நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றி கழகம் சார்பில் அதன் நிர்வாகிகள் திருவள்ளூரில் 900 நாட்களாக ஏழை எளிய மக்களுக்கு காலை உணவு வழங்கி வருகின்றனர்.;
கைக்குழந்தையோடு காலை உணவைப் பெற்றுச் செல்லும் பொதுமக்கள் மனசார வாழ்த்திறாங்க...
TVK Party Issued Morining Tiffin
தமிழகத்தில் புதியதாக கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் பல நல உதவிகளை வழங்கி வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் இதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. அந்த வகையில் அனைவருக்கும் காலை உணவு என்ற திட்டத்தினையும் அக்கட்சி நிர்வாகிகள் திருவள்ளூர் மாவட்டத்தில் மிக நல்ல முறையில் செயல்படுத்தி வருவது ஏழை மக்களின் பசியைப் போக்குவதாக அமைந்துள்ளதாக மனதார பாராட்டி வருகின்றனர். உண்டி கொடுத்தோரோ உயிர் கொடுத்தோர் என்ற பழமொழிக்கேற்ப விஜயின் இந்த செயல்பாடு அமைந்துள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
தமிழக வெற்றி கழகம் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் குட்டி தலைமையில் 900 வது நாளாக ஏழை எளிய மக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
TVK Party Issued Morining Tiffin
நடிகர் விஜயின் புதிய கட்சியான தமிழக வெற்றிக்கழகம் சார்பில் பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
திருவள்ளூர் அடுத்த ஆயில் மில் பகுதியில் அமைந்துள்ள தமிழக வெற்றி கழகம் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைமை அலுவலகத்தில்தளபதி விஜய்யின் ஆணைப்படிபொதுச் செயலாளர் புஸ்ஸிஆனந்த் அறிவுறுத்தலின்படிகடந்த 2021ஆண்டில் திருவள்ளூர் தொகுதி, பூந்தமல்லி தொகுதி, நிர்வாகிகளின் ஒத்துழைப்புடன் தினந்தோறும் 100 க்கு மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகின்றன, அதன் ஒரு தொடர்ச்சியாக இன்று மார்ச் 2 யில் 900 வது நாளாகஏழை மக்களின் பசியை போக்கிடும் விதமாக நூற்றுக்கு மேற்பட்ட ஏழை மக்களுக்கு ருசி உள்ள காலை உணவு வழங்கப்பட்டது, இதனை வாங்கி சாப்பிட்ட ஏழை மக்கள் விஜயை மனதார வாழ்த்துகின்றனர்,
மேலும் இது குறித்து பொதுமக்களிடம் கேட்டபோது முதல்வராக வருவதற்கு முன்பாகவே விஜய் ஏழை மக்களின் எங்களைப் போல ஏழை எளிய மக்களுக்கு உணவளித்து எங்கள் பசியைப் போக்குவராகவும், அவர் முதல்வராக வந்தால் தமிழக அரசியலில் புதிய சாதனை படைப்பார் மேலும் அனைத்து மக்களின் பசிகளையும் தீர்ப்பார் என்றும்அவருக்காக நாங்க உறுதுணையாக நிற்போம் என்று உருக்கத்துடன் தெரிவித்தனர்.