செங்குன்றம் அருகே லாரி நடுரோட்டில் கவிழ்ந்ததால் போக்குவரத்து நெரிசல்

செங்குன்றம் அருகே லாரி நடுரோட்டில் கவிழ்ந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Update: 2022-09-02 12:00 GMT

செங்குன்றம் அருகே நடுரோட்டில் கவிழ்ந்த லாரியால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் புறவழிச்சாலை வாகனங்களின் போக்குவரத்து அதிகம் காணப்படும் முக்கிய சாலை. சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச்சாலை என்பதால் கார், இருசக்கர வாகனங்கள் மட்டுமல்லாது லாரிகள் அதிகளவில் பயணிக்கும் சாலை. அரிசி ஆலையில் இருந்து உமி ஏற்றிய லாரி ஒன்று செங்குன்றத்தில் இருந்து சென்னை நோக்கி சென்றபோது சோத்துப்பாக்கம் சந்திப்பின் அருகே ஜி.என்.டி சாலையில் கார் ஒன்றில் மோதியதால் சாலையின் தடுப்பு சுவற்றில் மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் செங்குன்றத்தில் இருந்து சென்னை செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் அனைத்தும் சர்வீஸ் சாலையில் ஊர்ந்து சென்றன. சாலையில் கவிழ்ந்துள்ள லாரியை மீட்கும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News