தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மாநில தலைவர் வெள்ளையன் மறைவுக்கு வியாபாரிகள் அஞ்சலி
உடல்நிலை குறைவால் மறைந்த தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மாநிலத் தலைவர் தா, வெள்ளையன் மறைவிற்கு பெரியபாளையம் வியாபாரிகள் சங்கம் சார்பில் அஞ்சலி அமைதி பேரணி சென்றது.
பெரியபாளையத்தில் மறைந்த தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மாநில தலைவர் த.வெள்ளையன் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வியாபாரிகள் கடைகள் அடைத்து அமைதி பேரணி நடத்தினர்.
வயது முதிர்வு உடல் நலக்குறைவால் மறைந்த தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மாநில தலைவர் த.வெள்ளையனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் வியாபாரிகள் அனுசரித்து வரும் நிலையில். அதில் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் வணிகர் சங்க பேரவை தலைவர் தனசேகர் தலைமையில் பெரியபாளையம் சுற்றியுள்ள 500-க்கும் மேற்பட்ட வணிகர்கள் கடைகள் அடைத்து இரங்கல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பெரியபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து காவல் நிலையம் வரை அமைதி பேரணி சென்று மீண்டும் பேருந்து நிலையம் வந்து முடிவடைந்தது.
நிகழ்ச்சியின் முன்னதாக பெரியபாளையம் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டு இருந்த தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் படத்திற்கு நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செய்தனர்.இதில் பெரியபாளையம் வணிகர் சங்க கௌரவ ஆலோசகர்கள் குருசாமி நாடார், அப்பாஸ், செயலாளர் டில்லி பாபு, பொருளாளர் ஜெகதீஸ்வர், துணைத் தலைவர் ரவிச்சந்திரன், செயல் ஆலோசகர் சின்னசாமி, இணைச் செயலாளர்கள் சுப்பாராவ்,செல்வம், ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள்,மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு வெள்ளையன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.