அதிக அளவில் சவுடு மண் எடுப்பதாக புகார்
புல்லரம்பாக்கம் பகுதியில் அரசு நிர்ணயித்த அளவைவிட சவுடு மண் அதிக அளவில் எடுப்பதால் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை.;
திருவள்ளூர் புல்லரம்பாக்கம் பகுதியில் உள்ள ஏரியில் தொடர்ந்து சவுடு மண் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சவுடு மண் எடுப்பது அரசு நிர்ணயித்த அளவைவிட அதிகமாக எடுப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் நிலத்தடி நீர் குறைந்து விவசாயம், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.