பொங்கல் பண்டிகையையொட்டி களைக்கட்டிய திருவள்ளூர் மார்க்கெட்

Top Pongal Sales In Market பொங்கல் பண்டிகையையொட்டி திருவள்ளூர் மார்க்கெட்டில் ஏராளமானோர் பொருட்களை வாங்க குவிந்தனர்.;

Update: 2024-01-15 05:45 GMT

திருவள்ளூர்  மார்க்கெட்டில் ஏராளமான பெண்கள் கலர்கோலம், பூ  என வாங்க திரண்டனர். 

Top Pongal Sales In Market

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் யொட்டி திருவள்ளூர் மார்க்கெட் பகுதியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வியாபாரம் சூடு பிடித்துள்ளது,தைப்பொங்கல் திருநாளை கொண்டாடுவதற்காக தேவையான , அகப்பை, கரும்பு, முழு மஞ்சள் செடி பழவகைகள், வாழை இலை,பூ,போன்றவற்றைகளைவாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி பொருட்களை வாங்கி சென்றனர்.

Top Pongal Sales In Market


திருவள்ளூர் மார்க்கெட்டில்  வழக்கத்தை விட பொதுமக்கள் அதிகம் பேர்  பொருட்கள் வாங்க திரண்டனர்.

ஆண்டுதோறும்தைப்பொங்கல் ஆனது ஜனவரி 15,16,17 ஆகிய தேதிகளில் மக்கள் மிக மகிழ்ச்சியுடன் குடும்பத்துடன் கொண்டாடப்படுகின்றன,மேலும் தைப்பொங்கலின் முக்கிய அங்கம் வகிக்கும் செங்கரும்பு விற்பனையானது சூடு பிடித்துள்ளது. ரகத்துக்கு ஏற்றவாறு ஜோடி ரூ.80 முதல் ரூ.100 வரையிலும், ஒரு ஜோடி மஞ்சள் கொத்து ரூ.25 முதல் ரூ.50 வரையிலும், சாமந்திப்பூ ஒரு கிலோ 200 ரூபாய் இருந்து 250 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது, மேலும்

இதேபோல, வெல்லம், பச்சரிசி, முந்திரி, திராட்சை, தேங்காய், கற்பூரம், ஊதுபத்தி உள்ளிட்ட பூஜை பொருள்கள் விற்பனையும் அதிகரித்துள்ளது, மேலும்காய்கறி மார்க்கெட், பகுதிகளில் நேற்று விற்பனை விட இன்றுபொதுமக்கள் அதிக அளவில்

காய்கறிகள் வாங்கி சொல்வதனால் வியாபாரம் அதிக அளவில் நடைபெறுவதாகவும்வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News