திருவள்ளூர் பெரியபாளையம் அருகே தந்தையை அடித்து கொலை செய்த மகன் கைது

திருவள்ளூர் பெரியபாளையம் அருகே தந்தையை அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-02-20 04:22 GMT

கைது செய்யப்பட்ட மகன்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆரணி தமிழ்காலனி பகுதியை சேர்ந்தவர் வேணு (60). கூலி தொழிலாளியான இவரது மனைவி சில வருடங்களுக்கு இறந்த நிலையில் தமது மகன் மணிகண்டனுடன் (20) வசித்து வந்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளான நேற்று அனைத்து பகுதி மக்களும் வாக்களித்து வந்த நிலையில் வீட்டிலிருந்த மணிகண்டன் மாலையில் திடீரென ரத்தக்கரையுடன் இருந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆரணி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது கூலி தொழிலாளி வேணு வீட்டில் சடலமாக கிடந்துள்ளார். தொடர்ந்து நடத்திய விசாரணையில் குடித்துவிட்டு வேலைக்கு போகாமல் ஊர் சுற்றுவது குறித்து தந்தை கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் தந்தை வேணுவை மணிகண்டன் சுவற்றில் இடித்து தாக்கியுள்ளார்.

பலத்த காயமடைந்த வேணு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் பிரேத ப‌ரிசோதனை‌க்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து ஆரணி போலீசார் தந்தையை அடித்து கொன்ற மகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடித்துவிட்டு வேலைக்கு போகாமல் ஊர் சுற்றிய மகனை தட்டிக்கேட்ட தந்தை அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News