திருவள்ளூரில் நடமாடும் காய்கறி வாகனங்கள்: அமைச்சர் துவக்கி வைத்தார்!

திருவள்ளூர் நகராட்சியில் நடமாடும் காய்கறி வாகனங்களை பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Update: 2021-05-24 05:32 GMT

காய்கறி வாகன சேவையை அமைச்சர் சா.மு.நாசர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோயின் காரணமாக தமிழக அரசு இன்று முதல் மே 31ம் தேதி வரை தளர்வுகளற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆகவே பொது மக்களின் அத்தியாவசியத் தேவைகளை அறிந்து பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான காய்கறி ஆகிய முக்கிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதற்கு, தமிழக அரசு சார்பில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் நடமாடும் காய்கறி கடைகளை அமைத்து அதன் மூலம் பொது மக்களின் வீடுகள் தேடி காய்கறி விற்பனை நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இன்று திருவள்ளுவர் நகராட்சி அருகே நடமாடும் காய்கறி வாகனங்களை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News