திருவள்ளூரில் ஒரே நாளில் 428 பேருக்கு கொரோனா: 4 பேர் உயிரிழப்பு!
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 428 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்ததுள்ளது.
தமிழகத்தில் கொரோனா 2வது அலை காரணமாக தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. திருவள்ளூர் மாவட்டத்திலும் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அரசு பிறப்பித்ததால் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.
இன்று ஒரே நாளில் 428 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 722 பேர் கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் இன்று 4 பேர் கொரோனாவின் காரணமாக உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் இன்று வீடுகளின் தனிமைப்படுத்துதல் மற்றும் மருத்துவமனை மூலமாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3095 ஆக உள்ளது.
மேலும் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,06,593 ஆகவும், இதில் 1,01,942 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவிற்காக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1556 என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.