திருவள்ளூர்: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திருவள்ளூரில் திரளான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

Update: 2022-05-03 05:30 GMT

சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்.

ரமஜான் இசுலாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமாகும். இம்மாதம் ரம்ஜான், ரமலான் எனவும் அழைக்கப்படுகிறது. இம்மாதத்தில் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் நோன்பை அனுசரிக்கிறார்கள். இஸ்லாமிய நம்பிக்கையின்படி முகம்மது நபிக்கு முதன் முதலில் குரானை வெளிப்படுத்திய மாதத்தை நினைவுகூறும் விதமாக இந்த நோன்பை அனுசரிக்கிறார்கள். ஆண்டுக்கொரு முறை அனுசரிக்கப்படும் இந்த நோன்பு இஸ்லாத்தின் ஐந்து தூாண்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் பழைய டோல்கேட் அருகே ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி பிற மதத்தினரும் ஒருவர் கட்டித் தழுவி தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். பெரியவர்கள் மட்டுமின்றி சிறுவர்கள் குழந்தைகள் என அனைவரும் தொழுகையில் கலந்து கொண்டு ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

இதேபோல் திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள இஸ்லாமிய மக்கள் இந்த சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மசூதிகளில், இஸ்லாமியர்கள் திரளாக வந்திருந்து சிறப்பு தொழுகை நடத்தினர். மாவட்டம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இஸ்லாமியர்கள் தொழுகைகளை நடத்தி வருகின்றனர். 250க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News