திருவள்ளூர் ரோட்டரி சங்கம் ரூ. 1 லட்சம் மருத்துவ உபகரணங்கள் வழங்கல்!

திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு சுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள்ரோட்டரி சங்கம் வழங்கியது.;

Update: 2021-05-25 08:12 GMT

திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கிய ரோட்டரி சங்கத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், அங்கு மருத்துவ உபகரணங்களின் தட்டுப்பாடு அதிகரித்து வருகின்றது. இதனை அறிந்த ரோட்டரி சங்கத்தினர் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு 1 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கினர்.

அதில் அவர்கள் குளுக்கோமீட்டர், ஆக்சிஜன் மீட்டர், என்.ஆர்.பி மாஸ்க் மற்றும் என்95 மாஸ்க், மூன்று அடுக்குகள் கொண்ட மாஸ்க், நோயாளிகளுக்கான ஆஃப்ரான், போர்வைகள், பி.பி.இ. கிட், சர்ஜிகல் கவுன், இன்ஸ்பெக்சன் கிளவுஸ், ஹேண்ட் சனிடைசர் என 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான கொரோனாவிற்காக பயன்படுத்தும் மெடிக்கல் உபகரணங்களை, திருவள்ளூர் அரசு மருத்துவர் ராஜ்குமார், டாக்டர் ஜெகதீஸ் மற்றும் டாக்டர் பிரபு சங்கர் ஆகியோர்களிடம் திருவள்ளூர் ரோட்டரி சங்கத்தின் தலைவர் சந்துரு, செயலாளர் டி.ஆர். பாலாஜி, உடல்நல இயக்குனர் ஆர்.எஸ் திராவிடமணி ஆகியோர்கள் வழங்கினார்கள்.

Tags:    

Similar News