தலைவர் உதயமலர் பாண்டியன் தலைமையில் திருவள்ளூர் நகராட்சி முதல் கூட்டம்
தலைவர் உதயமலர் பாண்டியன் தலைமையில் திருவள்ளூர் நகராட்சியின் முதல் கூட்டம் நடைபெற்றது.;
திருவள்ளூர் நகராட்சி முதல் கூட்டம் தலைவர் உதயமலர் பாண்டியன் தலைமையில் நடந்தது.
திருவள்ளூர் நகராட்சியின் முதல் நகரமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தலைவர் உதயமலர் பாண்டியன் தலைமையில் நடந்தது. 14வது வார்டு அருணா ஜெயகிருஷ்ணா பெண் நகரமன்ற உறுப்பினர் அவரது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் ரோடு வசதி,கழிவுநீர் பூங்கா அமைக்க உள்ளிட்ட கோரிக்கைகளை ஆங்கிலத்தில் பேசி வலியுறுத்தியது அனைவரையும் ஒரு நிமிடம் ஆச்சரியமாகவும் ஒருசிலருக்கு புரியாமலும் பார்க்க வைத்தது. அதை தொடர்ந்து 9வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஆயூப்அலி முதல் நகர்மன்ற கூட்டத்தில் அவரது முதல் பேச்சை கேட்பதற்காக தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு பயிலும் அவரது மகள் ஆசியா கூட்டத்திற்கு வந்திருந்த அவரது தந்தையின் பேச்சை வீடியோ பதிவு செய்து நெகிழ்ச்சியுடன் பார்த்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
அதைத்தொடர்ந்து கவுன்சிலர்கள் அவரவர் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தேவையான பல்வேறு கோரிக்கைகள் வைத்து பேசினார்கள். இக்கூட்டத்தில் நகர மன்ற துணை தலைவர் சி.சு ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.