திருவள்ளூர் எம்எல்ஏ ராஜேந்திரனிடம் பிஞ்சிவாக்கும் தலைவர் மனு அளித்தார்

கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பிஞ்சிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பல்வேறு கோரிக்கைகளை மனுவாக சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரனிடம் வழங்கினார்.;

Update: 2021-06-19 14:14 GMT
திருவள்ளூவர் எம்எல்ஏ ராஜேந்திரனிடம் பிஞ்சிவாக்கம் ஊராட்சி தலைவர் மனு அளித்தார்.

கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஏழை பெண்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரனிடம் பிஞ்சிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சார்பில் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது. இதில் பாரதப் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் பிஞ்சிவாக்கம் ஊராட்சியில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு கடைசி தவணை வழங்கப்படவில்லை. இதனை உடனே வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் பிஞ்சிவாக்கம் ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் இணைய சேவை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த நிகழ்வில் அவைத் தலைவர் திராவிட பக்தன், கடம்பத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ், கடம்பத்தூர் ஒன்றிய துணை பெருந்தலைவர் திருமதி சரஸ்வதி ரமேஷ், மாவட்ட கவுன்சிலர் சரஸ்வதி சந்திரசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர், கிராம வட்டார வளர்ச்சி அலுவலர், வேளாண் துறை அதிகாரிகள், மின்வாரியத் துறை அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News