திருவள்ளூரில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு
திருவள்ளூரில் இன்று தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பொங்கல் பரிசு தொகுப்பை சட்டமன்ற உறுப்பினர் விஜி.ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.;
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ விஜி ராஜேந்திரன்
ஆண்டுதோறும் பொங்கல் தினங்களில் தமிழக அரசு சார்பில் மக்களுக்கு இலவச வெட்டி, சேலைகள், கரும்பு, பச்சரிசி, வெள்ளம், முந்திரி, திராட்சை, ஆகியவற்றுடன் ரொக்கப் பணமும் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான பரிசு தொகுப்பு வழங்க தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தலா ரூபாய் 1000 தொகை திட்டத்தை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கட்டுப்பாட்டில் உள்ள 1139 ரேஷன் கடைகள் மூலம் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள 6 லட்சத்து 25 ஆயிரம் ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி இன்று தொடங்கியது.
திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 2,வது வார்டு, 9,வது ஆகிய பகுதிகளில் திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ விஜி ராஜேந்திரன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்,
அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகையை திருவள்ளூர் நகர்மன்ற தலைவர் உதய மலர் பொன் பாண்டியன்,9 வது,வார்டு கவுன்சிலர் அய்யூப் அலி நகராட்சி ஆணையர் சுரேந்தர் ஷா, ஆகியோர்களால் தொடர்ந்து வழங்கப்பட்டது.