திருவள்ளூர்: கொரோனா கட்டுப்பாட்டிற்கு அமைச்சர் சா.மு.நாசர் நியமனம்
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் நியமனம் - தமிழக அரசு அறிவிப்பு.;
9.5.2021 இன்று காலை 11.30 மணியளவில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்க்கு இணங்க கொரோனா தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்திடவும் அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்திடவும், நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சைகள் தொடர்பான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் கொரோனா அதிகம் உள்ள மாவட்டங்களில் அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பணிகளை மேற்கொள்ளவும் பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.