திருவள்ளூர்: மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு

திருவள்ளூரில் உள்ள தலைமை அரசு மருத்துவமனையில் ரூ. 385 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம்.

Update: 2021-05-13 01:46 GMT

திருவள்ளூரில் உள்ள தலைமை அரசு மருத்துவமனையில் ரூ. 385 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்படுவதால், அது பயன்பாட்டிற்கு வரும்போது மிகப்பெரிய அளவில் மருத்துவ வசதி கிடைக்கும் என சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க திருவள்ளூர் அரசு மருத்துவமனை கல்லூரி மருத்துவமனையில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பால்வளத் துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசும்போது:- திருவள்ளூர் மாவட்டத்தில் நாள்தோறும் 1000த்திலிருந்து 1300 பேர் வரை கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. இதுவரை 2500 பேர் மருத்துவமனைகளிலும் 1,140 பேர் தனிமைப்படுத்தப்படும் 2,164 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் 17 நடமாடும் பரிசோதனை வாகனங்களும், 33 தடுப்பூசி போடும் வாகனங்களும், தினமும் 70 இடங்களில் மருத்துவ முகாம்களும் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் இதுவரை திருவள்ளூர் மாவட்டத்தில் 1,98,000 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 250 கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் உள்ளதாகவும், தமிழகம் முழுவதும் 142 இடங்களில் பிராணவாயு உற்பத்தி நிலையங்கள் தொடங்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அவை ஒவ்வொன்றும் 16 லட்சம் செலவில் தொடங்கப்பட உள்ளது என்றும், ஆவடி அரசு மருத்துவமனையில் இதுவரை மருத்துவம் மட்டுமே பார்த்து வந்த நிலையில் தற்போது படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை தொடங்கப்பட உள்ளது என்றும் தெரிவித்தார்.

Tags:    

Similar News