திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மூச்சுத் திணறி 4 பேர் சாவு-டீன் மறுப்பு!

திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் 4 பேர் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்துள்ளனர். மருத்துவமனை நிர்வாகம் தான் காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Update: 2021-06-06 19:04 GMT

திருவள்ளூர் அரசு மருத்துவமனை உள் நோயாளிகள் பிரிவு

தமிழகத்தில் கொரோனா 2ம் அலையில் மூச்சுத்திணறல் அதிக அளவில் ஏற்படுகிறது. இதனால் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடும் அதிகமாக நிலவி வருகின்றது. தமிழக அரசு தற்போது பலகட்ட முயற்சிகளை செய்து ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவமனை படுக்கை பற்றாக்குறைகளை தீர்த்து வருகின்றன.

இந்த நிலையில்  திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 4 பேர்  உயிரிழந்துள்ளனர். இவர்கள் 4 பேருக்கும் ஆக்சிஜன் சிலிண்டரை உரிய நேரத்தில் மாற்றாததால் இறந்தனர் என உறவினர்கள் கூறுகின்றனர். ஆனால் இதை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.

இது குறித்து அவர்களது உறவினர்கள் கூறுகையில், இரவு 1 மணிக்கு ஆக்சிஜன் தீர்ந்துபோன நிலையில் அதிகாலை 3 மணிக்குத்தான் ஆக்சிஜன் சிலிண்டரை மாற்றியுள்ளனர். இதனால்தான் இந்த 4 பேரும் இறந்தார்கள் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இவர்கள் உயிரிழக்கவில்லை என மருத்துவமனை மறுத்துள்ளது. இதுகுறித்து மருத்துவமனை டின் அரசி கூறுகையில், எங்கள் மருத்துவமனையில் இறந்த 4 பேரும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறக்கவில்லை. அவர்கள் 4 பேரும் 70 வயதை கடந்தவர்கள். ஆகவே, மூச்சுத்திணறல் காரணமாகவே உயிரிழந்ததாக டீன் அரசி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News