திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு 20 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வழங்கல்!

திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு 20 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை ரோட்டரி சங்கத்தினர் வழங்கினர்.;

Update: 2021-05-30 09:00 GMT

திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு 20 ஆக்சிஜன் சிலிண்டர்களை ரோட்டரி சங்கத்தினர் வழங்கிய காட்சி.

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனை தவிர்க்கும் பொருட்டு திருவள்ளூர் ரோட்டரி சங்கம் சார்பாக ரூ. 3.5 லட்சம் மதிப்பீட்டில் 20 ஆக்சிஜன் சிலிண்டர்களை திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

Tags:    

Similar News