திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 487 பேருக்கு கொரோனா: 14 பேர் பலி!
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 487 பேருக்கு கொரோனா தொற்று உறுதி என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்ததுள்ளது.;
தமிழகத்தில் கொரோனா 2வது அலை காரணமாக தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதனையடுத்து தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவித்ததால், தற்போது சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 487 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1029 பேர் கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் இன்று 14 பேர் கொரோனாவின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
மாவட்டத்தில் வீடுகளின் தனிமைப்படுத்துதல் மற்றும் மருத்துவமனை மூலமாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4649 ஆக உள்ளது.
மேலும் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,04,904 ஆகவும், இதில் 98,752 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவிற்காக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1503 என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.