தனது வாக்கினை பதிவு செய்தார் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர்

திருவள்ளூரில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தனது வாக்கினை பதிவு செய்தார்.

Update: 2024-04-18 20:16 GMT

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தனது வாக்கினை பதிவு செய்த காட்சி.

தமிழகம் முழுவதும் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் புதுச்சேரி நாடாளுமன்ற  தொகுதி என 40 தொகுதிகளிலும் இன்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

திருவள்ளூர் (தனி)தொகுதியில் நாடாளுமன்ற தொகுதியில் இன்று காலை ௭ மணிக்கு தேர்தல் தொடங்கியது . திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட லட்சுமி மேல்நிலை பள்ளியில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான பிரபுசங்கர் தனது வாக்கினை பதிவு செய்தார்.

திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மாதவரம் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுயில் 10 லட்சத்து ,24 ஆயிரத்து 149 ஆண் வாக்காளர்களும், 10 லட்சத்து,61 ஆயிரத்து 457 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 385 பேர் உள்பட மொத்தம் 20 லட்சத்து 85 ஆயிரத்து 991 வாக்காளர்கள் உள்ளனர்.

மொத்தமாக திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் 2256 வாக்கு சாவடி மையங்கள் உள்ளன.  எனவே தொகுதிக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்கள் தயார் நிலையில் இருப்பதால் விறுவிறுப்பாக வாக்கு பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவள்ளூர் தனி நாடாளுமன்ற தொகுதி தேர்தலில்  திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட லட்சுமி மேல்நிலை பள்ளியில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான பிரபுசங்கர் தனது வாக்கினை பதிவு செய்தார்.

Tags:    

Similar News