நோயாளிகளுக்கு சிகிச்சை: மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு;
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனவா என்பது குறித்து இன்று கொரோனா உடையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. அதே சமயத்தில் இறப்பு விகிதமும் அதிகரித்து வருகிறது. எனவே தமிழக அரசு கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக கடந்த 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தி அதனை செயல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருகின்றது, பலியின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா இன்று திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகின்றனவா, முறையாக கொரோனாவில் பாதிக்கபட்டவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, ஆக்சிஜன் வசதிகளும் கூடிய படுக்கை அறைகள், படுக்கை வசதிகள் ஏற்படுத்தித் தரப்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள கொரோனா உடை அணிந்து கொரோனா வார்டுக்கு சென்று, அங்குள்ள மருத்துவரிடம் ஆலோசனை நடத்தினார்.