திருவள்ளூரில் 1152 பேருக்கு கொரோனா: 12 பேர் பலி
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் இறப்பு விகிதமும் அதிகரித்து வருகிறது. இன்று 1152 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில், 12 பேர் உயிரிழந்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில், 1152 நபர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. இதுவரை 63,618 நபர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி இருக்கிறது.
இன்று ஒரேநாளில் 927 நபர்கள் டிஸ்சார்ஜ் ஆன நிலையில், இதுவரை 56,639 நபர்கள் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இன்று ஒரே நாளில் 12 நபர்கள் உயிரிழந்ததால், இதுவரை திருவள்ளூர் மாவட்டத்தில் 831 நபர்கள் உயிரிழந்திருப்பதாகவும், தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் 6148 நபர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.