திருவள்ளூரில் ஒரே நாளில் 744 பேருக்கு கொரோனா: 26 பேர் பலி!
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 744 பேருக்கு கொரோனா தொற்று உறுதி என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்ததுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
ஒரே நாளில் 744 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 1275 பேர் கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் 26 பேர் கொரோனாவின் காரணமாக உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் வீடுகளின் தனிமைப்படுத்துதல் மற்றும் மருத்துவமனை மூலமாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 7683 ஆக உள்ளது.
மேலும் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,02,066ஆகவும், இதில் 92,973 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1410 என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.