காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் பிரச்சாரம்

பூண்டியில் திருவள்ளூர் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் சசி காந்த் செந்தில் பிரச்சாரம் செய்தார்

Update: 2024-04-17 09:45 GMT

காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 

பாஜக தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றம் அறிக்கையாக உள்ளதாக திருவள்ளூர் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியின் இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் இன்று இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சார பரப்புரையை பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிறுவனூர் கண்டிகை, தங்கனூர், சிறுவனூர் கொசவன் பாளையம், பாண்டூர், பட்டறை பெருமந்தூர், ஆகியகிராமங்களை மேற்கொண்டு மக்களிடம் வாக்குகளை சேகரித்தார்,

அப்பொழுது பேசிய அவர் பாஜகவை தேர்தல் அறிக்கையில் மக்களைச் சார்ந்த திட்டங்கள் இல்லாமல் மக்களை ஏமாற்றம் திட்டங்களாக உள்ளதாகவும்.பக்கத்து வீட்டு காரர்களை சண்டை போட வைப்பது தான் பாஜக அரசியல் என்றும் மக்களிடையேகலகத்தை மூட்டி அரசியல் செய்யக்கூடிய கட்சி பாஜக கட்சி எனவும் கூறினார். 

நம் அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு அமைதியான வாழ்க்கை கொடுக்க வேண்டும் என்றால் மோடியும் ஆர் எஸ் எஸ் இயக்கங்களும் இந்த நாட்டை விட்டு விலக வேண்டும். இல்லையென்றால் நம் தலைமுறையினர் குழந்தைகளுக்கு எதிர்காலம் இருக்காது என்று கூறினார்.

கேளும், வருகின்ற தேர்தலை அரசியல் தேர்தலாக பார்க்க வேண்டாம் எனவும் நம் குடும்பங்களுக்காக நாம் செய்யும் கடமையாக பார்க்க வேண்டும் எனவும் கூறினார்

நம் குழந்தைகள் எந்தவித மேல் படிப்பையும் படிக்காத வகையில் பாஜக அரசு முட்டுக்கட்டை போட்டு உள்ளது. நீட் தேர்வு போன்ற தேர்வுகளை வைத்து நம் குழந்தைகள் கல்வியில் மேலே செல்லாமல் பாஜக அரசு தடுத்து வருகிறது.  தமிழகத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் ஆட்சி நடைபெற்று வருவதால் பாஜக பண்ணும் பல பிரச்சினைகள் இங்கு வராமல் உள்ளது. மோடி அரசு 5 ஆம் வகுப்பிலே பொது தேர்வு வைத்து ஏழைக் குழந்தைகள் தேர்வில் தோல்வியடைந்து பள்ளிக்கு வராமல் செய்து வருகிறது. மக்கள் விரோத பாஜக அராஜக ஆட்சியை அகற்ற தமிழகத்தில் எப்படி நல்லாட்சி கொடுத்தீர்களோ அதே போல் டெல்லியிலும் ஒரு நல்லாட்சி கொடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்வதாகவும் அவர் கூறினார்.

இந்த பிரச்சாரத்தில் திருவள்ளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி ராஜேந்திரன் பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News