திருவள்ளூர்: அரசு மருத்துவர்கள் தமுமுகவினருக்கு பாராட்டு சான்றிதழ்!

ரத்ததான கொடையாளர் தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தமுமுகவினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.;

Update: 2021-06-19 13:30 GMT

ரத்ததான கொடையாளர் தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தமுமுகவினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.

திருவள்ளூர் மாவட்டத்திலும் பல்வேறு காலகட்டங்களில் தமுமுகவினர் மற்றும் மமகவினர் பல்வேறு அவசர நிலைகளில் ரத்ததான முகாம்களின் மூலமாக பல்வேறு உயிர்களை காப்பாற்றி வந்தனர். இதனை பாராட்டும் விதமாக திருவள்ளூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் உலக ரத்ததான கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமுமுகவினருக்கு பாராட்டு சான்றிதழை வழங்கினார்.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட தமுமுகவிற்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது இதனை  மாவட்டச் துணைச் செயலாளர் திருவள்ளூர் அசாருதீன், மமக துணை செயலாளர் பூவிருந்தவல்லி  ஜெயினுலாபுதீன், பூவிருந்தவல்லி நகர இளைஞரணி செயலாளர் அப்துல் மாலிக் ஆகியோர்கள் பெற்றுக் கொண்டனர்.

Tags:    

Similar News