திருவள்ளூர்: மத்திய பாதுகாப்பு படை வீரர் மாரடைப்பால் மரணம்; அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

திருவள்ளூரை சேர்ந்த மத்திய பாதுகாப்பு படை வீரர் ர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Update: 2021-06-14 15:10 GMT
உயிரிழந்த மத்திய பாதுகாப்பு படை வீரர் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு பகுதியை சேர்ந்தவர் தேவதத்தம். முன்னாள் ராணுவ வீரரான இவரது மகன் சத்திய சாட்சி. இவர் சிஆர்பிஎஃப் எனப்படும் மத்திய பாதுகாப்பு படைப் பிரிவில் சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் இந்திராம் எனப்படும் எல்லையோரப் பகுதியும், நக்சலைட்டுகள் அதிகம் உள்ள பகுதியில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை ரோந்து பணிக்காக சக வீரர்களுடன் சென்று கொண்டிருந்தார். நீண்ட தூரம் சென்று கொண்டிருந்த நிலையில் சத்யசாட்சிக்கு என்பவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

உயிரிழந்த சத்யசாட்சி என் மனைவி கவிதா சென்னை அடுத்த ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு மகன்கள் உள்ளனர். பணியின் போது உயிரிழந்த உள்ள அவரது திருவள்ளூர் அடுத்த ஈக்காட்டில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு, உறவினர்கள் அஞ்சலிக்காக வைத்திருந்து அங்குள்ள மயானத்தில் அவரது உடலை நல்லடக்கம் செய்தனர். அப்போது சி.ஆர்.டி.பி சிஆர்பிஎஃப் அதிகாரிகள் அவரது உடலில் தேசியக்கொடியை போர்த்தி, மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

Similar News