திருவள்ளூரில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு !

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ‘நடைபெற்றது.

Update: 2021-06-11 11:35 GMT

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி எடுத்த காட்சி.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி  மாவட்ட வருவாய் அலுவலர் வே. முத்துசாமி தலைமையில் நடைபெற்றது. இதில், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வித்யா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் முகமது ரசூல் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில், இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்குச் செல்வதை ஊக்குவிப்பேன் எனவும் குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலும் அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன் என்றும் தமிழகத்தை குழந்தை தொழிலாளர்களற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இன்ற முயற்சிகளில் ஈடுபடுவேன் எனவும் உளமார உறுதி கூறுகிறேன் என குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர். அதனைத் தொடர்ந்து கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது.

Tags:    

Similar News