திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம்

Tiruvallur Admk Discussion Meet திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் பாராளுமன்ற தேர்தல் தெருமுனை கூட்டம் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் ரமணா தலைமையில் நடைபெற்றது.;

Update: 2024-02-20 05:15 GMT

 Tiruvallur Admk Discussion Meet

திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.வி ரமணா தலைமையில் புரட்சித்தலைவி அம்மாவின் 76 வது பிறந்தநாள் விழா மற்றும் பாராளுமன்ற தேர்தல் தெருமுனைக் கூட்டம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

 Tiruvallur Admk Discussion Meet


திருவள்ளூரில் நடந்த அதிமுக ஆலோசனைக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா பேசினார். 

புரட்சித் தலைவி அம்மாவின் 76 பிறந்த நாள் விழா வரும் 24-ம் தேதி தலைமைக் கழகம் அறிவுறுத்தலின் பேரில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.இதனையடுத்து திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் புரட்சித் தலைவி அம்மாவின் 76-வது பிறந்த நாள் விழா மற்றும் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், தெருமுனை கூட்டம் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா கலந்து கொண்டு பேசினார். அப்போது திருவள்ளுர் மேற்கு மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர், திருத்தணி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள ஒன்றியம், நகரம், பேரூர் பகுதியில் அதிமுக கொடியேற்றுதல், கல்வெட்டு அமைத்தல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், சுவர் விளம்பரம் எழுதுதல், தெருமுனைக் கூட்டங்கள் நடத்திட நிர்வாகிகள் செய்யவேண்டியது குறித்து எடுத்துரைத்தார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற திமுகவின் கையாளாகாத தனத்தை பொது மக்களிடம் எடுத்துச்சொல்லியும் புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மா, புரட்சித் தமிழர் எடப்பாடியார் ஆகியோர் ஆட்சியில் நடைபெற்ற சாதனைகளை பொது மக்களிடம் எடுத்துச் சொல்லி வாக்கு சேகரித்தால் வரும் நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்லாது, 2026 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக அமோக வெற்றி பெற்று புரட்சித் தமிழர் முதல்வர் ஆவது நிச்சயம் என முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா தெரிவித்தார்.

 Tiruvallur Admk Discussion Meet


ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்ற தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள். 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட துணைச் செயலாளர் பாண்டுரங்கன், கர செயலாளர்கள் திருவள்ளூர் கந்தசாமி, திருத்தணி சௌந்தர்ராஜன், ஒன்றிய செயலாளர்கள் சூரகாபுரம் சுதாகர், திருவாலங்காடு சக்திவேல், பூண்டி மாதவன், திருத்தணி இ.. என். கண்டிகை. .ரவி பள்ளிப்பட்டுசீனிவாசன் பேரூர் செயலாளர்கள் பள்ளிப்பட்டு ஜெயவேலு பொதட்டூர்பேட்டை ரவிச்சந்திரன், நிர்வாகிகள் சிற்றம் சீனிவாசன், ஆர்டிஇ சந்திரசேகர், ஞானகுமார், கேபிஎம் எழிலரசன்,நேசன், நகர்மன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், வெங்கடேசன் உள்பட நிர்வாகிகள் பலர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Tags:    

Similar News