திருவள்ளூர்: ஒரே நாளில் 529 பேருக்கு கொரோனா தொற்று
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 529 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, 249 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.;
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 529 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; டிஸ்சார்ஜ் 249 என மாவட்ட நிர்வாகம் தகவல்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனாவின் இரண்டாவது கட்ட அலையானது வெகுவாக பரவி வருகின்றது. இதன் வெளிப்பாடாக இன்று ஒரே நாளில் 529 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உருவாகியுள்ளது. மேலும் 249 பேர் கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் இன்று வீடுகளில் தனிமைப்படுத்தல் மற்றும் மருத்துவமனை மூலமாக கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருபவர்களில் எண்ணிக்கை 3733 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்ய பெற்றவர்களின் எண்ணிக்கை 52, 643 ஆகும், இதில் 48, 170 பேர் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவிற்காக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 740 ஆக உள்ளது. இவ்வாறு மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.