திருவள்ளூர்: ஒரே நாளில் 510 பேருக்கு கொரோனா; 4 பேர் பலி
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனாவின் சிகிச்சை பெற்று வருபவர்களில் எண்ணிக்கை 3892 என மாவட்ட நிர்வாகம் தகவல்.;
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் கட்ட அலையானது வெகுவாக பரவி வருகின்றது. இதன் வெளிப்பாடாக இன்று ஒரே நாளில் 510 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 352 பேர் கொரோனாவிலிருந்து முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் கொரோனாவின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் மாவட்டத்தில் இன்று கொரோனாவிற்காக சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 3892 ஆக உள்ளது. மேலும் இதுவரை மாவட்டத்தின் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 53,158 ஆகவும் இதில் 48,522 பேர் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவிற்காக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 744 ஆக அதிகரித்துள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.