மணல் குவாரியை திறக்க டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை
திருவள்ளூர் அருகே மணல் குவாரியை திறக்க டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.;
டிப்பர் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை மனு அளிக்க வந்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பொது மக்களின் வசதிக்காக மணல் குவாரி செயல்படுத்த டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் அரசின் சாலை விரிவாக்கத் திட்டப் பணிகளுக்கு தனியார் நிறுவனங்களுக்கு குவாரி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தாங்கள் கட்டும் வீடுகளுக்கு மணல், சவுடு மண், கிராவல் மண் உள்ளிட்டவை கிடைக்காமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்நிலையில் செங்குன்றம் சுற்றுவட்டார லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் தலைமையில் சங்க நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் திருவள்ளூர் மாவட்டத்தில் வணிக ரீதியாக தயார் நிலையில் உள்ள சவுடு மண், கிராவல் குவாரியை உடனடியாக திறக்க வேண்டும் என்றும் இதனை நம்பியுள்ள 10 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும். அக்கரம்பாக்கம் குவாரி வணிக ரீதியாக செயல்பட்டு வந்த நிலையில் தனிப்பட்ட விரோதம் காரணமாக நடைபெற்ற குற்றச் சம்பவத்தால் குவாரி தடை செய்யப்பட்டதால் அதனை மீண்டும் திறந்து செயல்படுத்த வேண்டும் என்றும் பொது மக்களின் வசதிக்காக திருவள்ளூர் மாவட்டத்தில் வணிக ரீதியாக சவுடு மண் கிராவல் குவாரியை பரவலாக திறந்து போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன விபத்துக்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
குவாரியை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு செயல்பட வைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. அதையே லாரி உரிமையாளர்களும் மனுவாக அளித்து உள்ளனர்.