ஊத்துக்கோட்டை அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மூவர் கைது

ஊத்துக்கோட்டை அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மூவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.;

Update: 2023-01-03 07:05 GMT

ஊத்துக்கோட்டை அருகே இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ டிரைவர்  உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த சீத்தஞ்சேரி கிராமத்தில் வசித்து வருபவர் விஜய். இவர் வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கும் திருவள்ளூர் அடுத்த காக்களூர் கிராமத்தில் வசிக்கும் 25 வயது பெண்ணுடன் பழக்கம் இருந்து வந்த நிலையில் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்ததாக கூறப்படுகிறது . மேலும் வாடகைக்கு அவரது ஆட்டோவில் அடிக்கடி சென்றுவந்துள்ளதாக தெரிகிறது. இந்த பெண்ணை ஆட்டோ டிரைவர் விஜய் தனது கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

அந்த வீட்டில் ஏற்கனவே விஜய்யின் நண்பர்கள் சாம்ராஜ், சதீஷ் ஆகியோர் இருந்துள்ளனர். வீட்டில் அந்த இளம்பெண் இருந்தபோது திடீரென விஜய் உள்பட மூவரும் சேர்ந்து அந்த இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் கொடுமை செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க அந்த பெண் கடுமையாக போராடி உள்ளார். ஆனால் அவர்கள் விடாமல் அந்த பெண்ணை கொடுமைப்படுத்தி உள்ளனர். அந்த  இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்ததால் விஜய் உள்பட அனைவரும் தப்பி விட்டனர்.

இதன்பிறகு பாதிக்கப்பட்ட இளம்பெண் கொடுத்த புகாரின்படி, புல்லரம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலஹாசன் தலைமையில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். இந்த நிலையில், இளம்பெண்ணை கூட்டு பாலியல் கொடுமை செய்த விஜய், சாம்ராஜ், சதீஷ் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News