மண்டல மாநாடு குறித்து திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்

மண்டல மாநாடு குறித்து திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-09-21 12:58 GMT

மண்டல மாநாடு குறித்து திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சென்னை வானகரத்தில் நடைபெற உள்ள காங்கிரஸ் கட்சி மண்டல மாநாடு பொதுக்கூட்டம் குறித்து திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் திருவள்ளூரில் நடைபெற்றது.

வருகின்ற 1.ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற உள்ள காங்கிரஸ் கட்சி மண்டல மாநாடு பொதுக்கூட்டம் குறித்து சிறப்பு ஆலோசனை கூட்டம் திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி சட்டமன்ற உறுப்பினரும் திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவருமான துரை.சந்திரசேகர் கலந்து கொண்டு நடைபெற உள்ள மண்டல மாநாடு குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

அப்போது அவர் பேசும்போது மண்டல மாநாடு சிறப்பாக நடைபெற பொன்னேரி, திருவள்ளூர், திருத்தணி, ஆகிய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து மாநில, மாவட்ட, நகர, வட்டார, தலைவர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் மாநாடு முடியும் வரை யாரும் கலந்து செல்ல கூடாது என்றும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் நகரத் தலைவர் ஜான், மாநில பொதுச் செயலாளர் சி பி மோகன் தாஸ், மாநில பொதுச் செயலாளர் ரசின்குமார்,ஏகாட்டூர் ஆனந்தன், ஜே.கே வெங்கடேஷ், வி எஸ் ரகுராமன், நகரத் துணைத் தலைவர் ஸ்டாலின், கடம்பத்தூர் வட்டாரத் தலைவர் சதீஷ்குமார், கலீல் அகமது, உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News