மோரை, செங்குன்றம் மக்களுக்கு பட்டா: கலெக்டரிடம் சுதர்சனம் எம்எல்ஏ கோரிக்கை
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவை மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சுதர்சனம், மாவட்ட ஆட்சியர் பொன்னையாவை நேரில் சென்று சந்தித்து மனு அளித்தார்.
அந்த மனுவில், மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செங்குன்றம் பகுதி இஸ்லாமிய மக்களுக்கு தனி சுடுகாடு அமைக்க வேண்டும். மோரை மற்றும் செங்குன்றம் பகுதி மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை பெற்றுக்கொண்ட டாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்..