திருவள்ளூர் பிரபல ரவுடி ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு
திருவள்ளூர் அருகே பிரபல ரவுடி ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.;
திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு கலைஞர் நகர் பகுதியில் சேர்ந்தவர் பிரபல ரவுடி சந்தோஷ் (எ) ஜெபராஜ் வயது (30). இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 15 வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜெபராஜ் வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே சென்னை செல்லும் மார்க்கத்தில் ரயிலில் அடிபட்டு இறந்திருப்பதாக திருவள்ளூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து திருவள்ளூர் ரயில்வே போலீசார் ஜெபராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து யாராயினும் முன் விரோத காரணமாக அடித்து கொலை செய்தார்களா அல்லது ரயில்வே பாதையை கடக்க முயன்ற போது ரயில் மோதி பலியானாரா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.