திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் வெளியீடு!
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியலை வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார் வெளியிட்டார்.;
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்ட மன்ற தொகுதிகளில் 33 லட்சத்து 34 ஆயிரத்து 786 வாக்காளர்கள் உள்ளனர். அதிகபட்சமாக மாதவரம் தொகுதியில் 4 லட்சத்து 52 ஆயிரத்து 568 பேர் உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்ட மன்ற தொகுதிகளின் வருகின்ற 2024 ஆம் ஆண்டுக்கான சிறப்பு சுருக்கமுறை வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் வெளியிட்டார்.
மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 33.லட்சத்து 34. ஆயிரத்து 786 பேர் உள்ளனர். இந்தப் பட்டியலானது மாவட்டம் முழுவதும் உள்ள வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் (கோட்டாட்சியர் அலுவலகம்), உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்கள் (வட்டாட்சியர் அலுவலகம்), வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் பார்வைக்கும் வைக்கப்பட உள்ளது. இந்தப் பட்டியலை பொதுமக்கள் பார்வையிட்டு சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணியில் பங்கேற்கலாம்.
புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், தொகுதி மாற்றம், முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்துக்கும் அதற்கான படிவங்களை வழங்கி பட்டியலில் திருத்தம் செய்து கொள்ளலாம். மேலும் அக்.27ஆம் தேதி தொடங்கி டிச.9ஆம் தேதி வரை சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், நவ.4, 5, 18,19 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறவும் உள்ளன.
இந்த முகாம்களிலும் பொதுமக்கள் படிவங்களை வழங்கி திருத்தப் பணிகளை மேற்கொள்ளலாம், தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் பொன்னேரி -2,52,774, திருத்தணி -2,67,872, கும்மிடிப்பூண்டி-2,68,088, திருவள்ளூர்-2,57,811,பூந்தமல்லி -3,62,243, ஆவடி-4,31,908, மதுரவாயல்-4,17,157, அம்பத்தூர்-3,51,863, மாதவரம்-4,52,568, திருவொற்றியூர்-2,72,502 என ஆண்கள்-16,47,943, பெண்கள்-16,86,123, மாற்று இனத்தினர்-720 என மொத்தம்-33,34,786 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.